தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 76 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் மாநில கட்சிகளை சேர்ந்த 489 பேர், தேசிய கட்சிகளை சேர்ந்த 202 பேர், சுயேட்சைகள் என மொத்தம் 3 ஆயிரத்து 998 பேர் களத்தில் உள்ளனர். அவர்களில் 466 பேர் மீது குற்ற வழக்குகளும், 207 பேர் மீது கடுமையான குற்றவழக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக திமுக-வில் தான் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். களத்தில் இருக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் 178 பேரில் 136 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது அம்பலமாகி இருக்கிறது.
இவர்களில் 50 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி மீது 13 குற்ற வழக்குகள் இருப்பதும், இவை அனைத்தும் கடுமையான குற்ற வழக்குகள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 71 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருக்கிறது. அக்கட்சி சார்பாக குளச்சல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பிரின்ஸ் மீது 73 குற்ற வழக்குகள் இருப்பதும் அவற்றில் நான்கு கடுமையான குற்ற வழக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post