நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள கோவிலில் கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது. சென்னை வில்லிவாக்கத்தில் ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசக்தி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் அருள்புரியும் கோவிலில் 4-ம் ஆண்டு நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இக்கோவிலில் வருடம் தோரும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கொலுபொம்மைகள் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கொலு கண்காட்சியை புண்ணியகோட்டி மதுரை முத்து சுவாமிகள் துவக்கி வைத்தார். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் மாலை நேரங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற உள்ளது. திருவிளையாடல் நிகழ்வில் பிள்ளையார், சிவன் பார்வதியையும்,முருகன் உலகத்தை சுற்றி வருவது போலவும் கொலு அமைக்கப்பட்டுள்ளது. அதே போல காவிரி தோன்றிய வரலாறும் இங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது. 32 வகையான வெண்கல பிள்ளையார்கள், தாய்லாந்து பொம்மைகள், துபாய் பொம்மைகள், மரத்தாலான பொம்மைகளும், கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட பொம்மைகளும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
Discussion about this post