முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவரது தாயாரையும் இழிவுப்படுத்தி பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து, சேலத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
ஆ.ராசாவின் அநாகரிக பேச்சுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில், ஆயிரக்கணக்கான பெண்கள் கண்டனப் பேரணி நடத்தினர். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, எடப்பாடி பேருந்து நிலையத்தில் திரண்ட பெண்கள், கண்டன முழக்கங்களை எழுப்பினர். பெண்ணினத்தை அவமதிக்கும் வகையில் பேசிய ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், தேர்தல் தோல்வி பயம் காரணமாக, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில், முதலமைச்சர் மற்றும் பெண்ணினம் குறித்து தி.மு.க.வினர் அவதூறுகளை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post