மகளிர் உரிமை, மனு நீதி ஒழிப்பு என்பது மக்களை கவரும் ஓட்டாயுதம் என்பதை மற்றொரு முறை நிரூபித்து இருக்கிறது திமுக. பிரசாரம் என்ற பெயரில் அதன் தலைவர்கள் உதிர்க்கும் ஆபாசம் எல்லை மீறியிருக்கிறது.
முற்போக்கு முக மூடிகள் கிழியத்தொடங்கி விட்டன. மனதின் குரூரம் அவிழ தொடங்கி விட்டன. இயல்பை ஒளித்து, எத்தனை நாட்கள் அரிதாரம் பூச முடியும்….? பெண்ணுரிமை, சமத்துவம் என பெரியார் புகைப்படத்தை வைத்து எத்தனை நாட்கள் வேடம் தரிக்க முடியும்…? திமுகவின் பெண்ணிய பார்வைகள், அதன் தலைவர்கள் ஊடாகவே அம்பலமாகி கொண்டிருக்கிறது. இயல்பில் உள்ளதுதானே மொழியில் வெளிப்படும்.
“பெண்களின் இடுப்பு பேரல்” என்று கேலி பேசுகிறார். சிக்ஸ் பேக்ஸ் லியோனி. சபையில் பகிர முடியாத சொற்களால் முதலமைச்சரின் தாயாரை இழிவு படுத்துகிறார் சல்லாப நாயகன் ராசா. இவர்கள் மட்டுமல்ல உதயநிதி தொடங்கி ஒவ்வொரு உடன் பிறப்புகளிடமும் ஊழலைப் போலவே ஆபாசமும் ஊறிப் போய் கிடக்கிறது.
திமுக கவிஞர் வைரமுத்து, எழுதி குவித்த ஆபாசங்கள் எத்தனை…எத்தனை….? அவர் எழுதிய பெண்ணியம் போற்றும் வரிகள் திமுகவின் பெருமை சொல்லும்.
வைரமுத்து திரைக்கவிஞர். அவரை திமுக கவிஞராக சுருக்க முடியுமா… எனில்முடியும். அவரது சொல், செயல், குணம் என அக்மார்க் உடன் பிறப்பின் மரபணுவை அவரிடம் காண முடியும்.
இவ்வளவு ஏன்… இன்று ஒலிக்கும் “ஸ்டாலின் தான் வராரு” பாடல் வைரமுத்துவின் தவப் புதல்வன் மதன் கார்க்கியின் உபயம். தலைவர்கள் போல கவிஞர்கள்களுக்கும் வாரிசு என்றால்தான் திமுகவில் வழி திறக்கும் போல.
கருணாநிதி இருக்கும் போது திமுக இப்படி கிடையாது என்று முட்டுக் கொடுக்கும் மூர்க்கமான உடன்பிறப்புகளை இணையத்தில் காண முடிகிறது. ஆனால் கருணாநிதியே அப்படித்தான் என்பதை அவர்களுக்கு யார் சொல்வது. அவரின் “பாவாடை நாடா” சட்டமன்ற உரை சொல்லும் அவர் பேணிய பெண்ணியம் என்னவென்பதை….. அவ்வளவு ஏன் அன்றைய நாளில் திமுகவில் இணைந்த குஷ்பு மீது வீசாத ஆபாசங்களா….? சுமத்தபடாத இழிவுகளா….? அப்போது கோபலாபுரத்தில் உயிர் இருந்ததுதானே….?
பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார் வாசித்தபோது தமிழகமே கொந்தளித்தது. ஊர் முழுக்க ஆர்ப்பாட்டம் என்று நடந்தது. ஆனால் ஒன்றுமே நடக்காதது போல அறிவாலயம் வந்து போய் கொண்டிருந்தார் ஸ்டாலின். ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய ஆபாச உரைக்கும் அறிவாலயத்தில் இருந்து நோ… ரியாக் ஷன்.
இதுதான் திமுக… அவர்களை பொருத்தவரை பெண்கள் கிள்ளுக்கீரைகள்… பட்டமன்ற நகைச்சுவை துணுக்குகள்….சதைப் பிண்டங்கள். இன்று இல்லை…, திமுகவின் கலாச்சாரம் ஆரம்பம் தொட்டே அப்படித்தான் இருந்திருக்கிறது.
தேர்தல் சமயம்….. எனவே, லியோனி மன்னிப்பு கேட்கிறார். ஆ.ராசா வருத்தம்தெரிவிக்கிறார். இல்லையெனில் என்னோடு விவாதம் வருகிறாயா… நீதிமன்றத்தில் சந்திப்போமா…..? .என ஆ.ராசாவின் ஆணவம் அடிபணிந்திருக்காது.
திமுகவின் மகளிர் அணியில் இருந்து மகளிர் அவமதிக்கப்பட்டதற்கு என்ன சொல்கிறார் என்று பார்த்தால் மொட்டை கடிதாசி எழுதி கொண்டிருக்கிறார் கனிமொழி. பேர் குறிப்பிடாமல், ஊர் குறிப்பிடாமல் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது என்று மொட்டை டிவிட் போட்டுக் கொண்டிருக்கிறது திராவிட சிசு…. இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்…
பெரியாரின் வாரிசு, என்று சொல்லிக்கொண்டு இவர்கள் செய்யும் இழி செயலால் அவமதிக்கபடுவது பெண்கள் மட்டுமல்ல…. பெரியாரும் சேர்த்துதான்…
Discussion about this post