சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல் பாடியபாடி வாக்கு சேகரித்தார்.
பழைய வண்ணாரப்பேட்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், அதிமுக, பாஜக தொண்டர்களுடன் சைக்கிள் ரிக்சாவில் அமர்ந்து வீதி வீதியாக சென்றார். அப்போது, வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பாடலை பாடி மக்களை கவர்ந்து வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கருத்துக் கணிப்பு என்பது பணம் கொடுத்து செய்த வேலை என்றும் அந்த வேலையை செய்வதற்கு பிரசாந்த் கிஷோர் உடன் இருப்பதாக கூறினார். ஆனால், கருத்து கணிப்பு உண்மை இல்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post