நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள் என்று வாக்களர்களிடம் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பழைய சின்னக் கவுண்டன்பாளையத்தில் இருந்து கூட்டணி கட்சியினருடன் அமைச்சர் தங்கமணி இருசக்கர வாகன பேரணியை தொடங்கினார். பின்னர், அலமேடு, பெரிய காடு, வசந்த நகர், ராஜாஜி நகர், காவிரி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகள் வழியாக சென்று காட்டூர் பகுதியில் பரப்புரையை நிறைவு செய்தார்.
அப்போது பேசிய அமைச்சர் தங்கமணி, கடந்த 10 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்ட வளர்ச்சிக்காக செய்த எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டார். 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்படும்போது, அடுத்த 40 ஆண்டுகளுக்கு குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் குடிநீர் பிரச்னை இருக்காது என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.
Discussion about this post