டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வர வாய்ப்பே இல்லை என்ற நிலையை உருவாக்கியது அதிமுக அரசு தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட ஆவணம் கைகாட்டி பகுதியில், அதிமுக வேட்பாளர் தர்ம தங்கவேலை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகளவிலான பயிர் இழப்பீடு தொகை பெற்று தந்த மாநிலம் தமிழ்நாடு எனக் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு என்றும், 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் ரத்து மூலம் 16 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் திருஞானசம்பந்தத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
திமுக தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணியை வீழ்த்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், சிறுபான்மையின மக்களை அரணாக இருந்து அதிமுக அரசு பாதுகாத்து வருவதாக குறிப்பிட்டார்.
பட்டுக்கோட்டை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தனது பரப்புரையை தொடங்கும்போது இஸ்லாமியர்களின் தொழுகையை கேட்ட முதலமைச்சர், பேச்சை பாதியில் நிறுத்தினார். மூன்று நிமிடங்கள் தொழுகை முடிந்த பிறகு முதலமைச்சர் மீண்டும் பரப்புரையை தொடங்கினார்.
இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயலை பட்டுக்கோட்டை மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Discussion about this post