வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா-வை தவிர்த்து, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நிமித்தமாக 72 மணி நேரம் மட்டுமே தமிழ்நாட்டில் தங்குபவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருபவர்களில் நெகட்டிவ் உள்ளவர்கள், பரிசோதனை மாதிரிகளை தந்துவிட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணத்திற்கு முன்பாக ஆன்லைனில் சுய விவரங்கள் மற்றும் 14 நாட்கள் பயணத் தகவல்களையும் தெரிவிப்பதுடன் ஆர்டி- பிசிஆர் பரிசோதனையில் 72 மணி நேரத்திற்கு கொரோனா நெகட்டிவ் இருந்தால் மட்டுமே பயண அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post