தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
அதில், கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார்.
விழுப்புரம் தொகுதியில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் களமிறங்குகிறார்.
சென்னை ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் களம் காண்கிறார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட உள்ள 6 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியல் அதிகார்வபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post