வடசென்னையின் தொன்மையையும், வாழ்வியலையும் பறைசாற்றும் வகையில், “வடசென்னை வரலாறும் வாழ்வியலும்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில், கிழக்கு பதிப்பக அரங்கில் இந்த புத்தக வெளியீடு நடைபெற்றது.
எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் எழுதியுள்ள “வடசென்னை வரலாறும் வாழ்வியலும்” புத்தகத்தை பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் வெளியிட, பண்பாட்டு ஆர்வலர் அனிதா மற்றும் வடசென்னை வாசியான சையத் சுபஹான் ஆகியோர் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேசிய எழுத்தாளர் நந்திதா லூயிஸ், வடசென்னை நிலப்பரப்பு, கலாச்சாரம் குறித்தும் திணிக்கப்பட்டுள்ள கற்பிதங்களை இந்த நூல் உடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Discussion about this post