போக்குவரத்து துறை சார்பில் 126 கோடி 79 லட்சம் ரூபாய் செலவில் 471 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
புதிய பேருந்துகளில் படுக்கை வசதி, கழிவறை, குளிர்சாதன வசதி உள்ளது.
விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.
பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர் பேருந்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.
Discussion about this post