மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த தினம், இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24ம் தேதி, ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவச் சிலையை, கடந்த மாதம் 28ம் தேதி முதலமைச்சர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் பிறந்தாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், அன்றைய தினம் வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்றார்.
அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும், ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்கின்றனர்.
Discussion about this post