தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.
15 வது சட்டப்பேரவையின் பதவிக்காலம், மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.தமிழ்நாடு பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
11 வது முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
தேர்தலையொட்டி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், மக்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவித்த விவசாயக் கடன்கள் தள்ளுபடி, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
Discussion about this post