கோவையில், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நலத்திட்டப் பணிகளை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில், தாலிக்கு தங்கம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக, நிலம் வழங்கியவர்களுக்கு, நில மதிப்பீடு தொகைக்கான காசோலைகளையும் அவர் வழங்கினார்.
மேலும், கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குறிச்சி முதல் ஈச்சனாரி வரையில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள, 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான எல்.இ.டி விளக்குகளை, அமைச்சர் இயக்கி வைத்தார்.
அண்ணாபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிக்கான காசோலைகள், முதியோர் ஓய்வு ஊதிய காசோலைகள் உட்பட பல்வேறு நிதியுதவிக்கான காசோலைகளையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.
Discussion about this post