15ஆம் தேதி நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும், ஃபாஸ்டேக் சுங்கச்சாவடியாக பிப்ரவரி 15 ஆம் தேதி நள்ளிரவு முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டண சட்டத்தின்படி, ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிஜிட்டல் வர்த்தகத்தை மேம்படுத்தவும், காத்திருக்கும் நேரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டை குறைக்கவும் ஃபாஸ்டேக் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post