சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, சென்னை மீனப்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமான படையின் ஹெலிகாப்டர் மூலம் சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு பிரதமர் வந்திறங்கினார். அங்கு பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றனர். அதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மத்திய மாநில அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். வழிநெடுகிலும் பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post