போப்பாண்டவருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய வடகொரிய அதிபரான கிம் ஜாங் இல், அன்றைய போப்பாண்டவரான இரண்டாம் ஜான் பாலுக்கு தங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.அவரது அழைப்பை ஏற்று போப் வடகொரியா வந்தார்.இதுவே முதலும் கடைசியுமான நிகழ்வாக இருந்தது.
இந்நிலையில் வடகொரியாவுக்கு வருகை தருமாறு போப்பாண்டவருக்கு அதிபர் கிம் ஜங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.அடுத்த வாரம் வாடிகன் செல்ல இருக்கும் தென்கொரிய அதிபர் மூன் ஜே,போப்பாண்டவரிடம் இதனை தெரிவிப்பார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post