சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களை, அதிகரிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா தொற்று குறைந்த பிறகு, மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க தந்திரியுடன் ஆலோசிக்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் வருமானம் நின்று விட்டதால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சீசனில் வர முடியாமல் போன பக்தர்களுக்காகவும், வருமான இழப்பை ஈடுகட்டவும் மாத பூஜைக்காக நடை திறக்கும் நாட்களை ஐந்தில் இருந்து பத்து நாட்களாக உயர்த்துவது குறித்து பசீலனை நடைபெற்று வருவதாக தேவசம்போர்டு தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post