தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் புதுச்சேரியில் நாளை கனமழை பெய்யும் என்றும், சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து கொண்டு தான் இருப்பதாகவும், வருகிற 12ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடரும் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post