திருச்சி மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில், காலை 9 மணியளவில் உள்ளுர் மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடுகிறார். பின்னர் திருச்சி மாவட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர், அலங்காநத்தம், வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
தொடர்ந்து, தொட்டியம் பகுதியில் வாழைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடுவதுடன், பாக்கு தோட்ட வேளாண் பெருங்குடியினரை சந்திக்கிறார். பின்னர், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் உள்ளுர் பிரமுகர் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
மாலை 6.15 மணிக்கு திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்திக்கும் முதலமைச்சர், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.
Discussion about this post