ராமநாதபுரம் மாவட்டத்தில், புரெவி புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.
கடந்த மாதம் உருவாகிய புரெவி புயல் மற்றும் அதனால் பெய்த கனமழையால், ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதிகளில் படகுகள் சேதமடைந்தன. மேலும், வயல்களில் மழை வெள்ளத்தால் நாற்றுகள் நாசமடைந்தன. இந்த பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக 8 பேர் கொண்ட மத்தியக் குழுவினர் நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தனர். அப்போது தனியார் தங்கும் விடுதியில் வைக்கப்பட்டிருந்த புயல் பாதிப்பு குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். இதையடுத்து, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலையில், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மத்தியக்குழு, புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளனர்.
Discussion about this post