தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில், சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் காலை முதலே வரிசையில் நின்று குளித்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 9 மாதங்களாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று முதல் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால், அதிகாலை முதலே மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதன் பின்னர், அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, 6 மணி முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள், அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். பழைய குற்றாலத்தில் மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post