முன்னுரிமை அடிப்படையில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கே தடுப்பூசி போட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தொடங்கி உள்ள நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், நாளொன்றுக்கு ஒவ்வொரு அமர்வும் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் எனவும், தடுப்பூசி போடப்பட்டவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகின்றனவா என 30 நிமிடம் கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மாவட்டத்துக்கு முடிந்தவரை ஒரே உற்பத்தியாளரின் தடுப்பூசியை வழங்க வேண்டும் எனவும், வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட பயனாளர்களை அடையாளம் காண சமீபத்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை பயன்படுத்தலாம் எனவும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post