சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, ஆர்டிஓ விசாரணை நாளை தொடங்குகிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகராம் தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்திடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று மீண்டும் ஹேம்நாத்திடமும், சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸின் ஓட்டுநரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்நிலையில், நாளை சித்ராவின் பெற்றோரிடம், அதனைத் தொடர்ந்து ஹேம்நாத்தின் பெற்றோரிடமும், ஆர்டிஓ விசாரணையை தொடங்க உள்ளது.
Discussion about this post