சென்னையில் ஆப்ரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 97 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 113 ரூபாய்க்கும், சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 904 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 97 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 733 ரூபாயாகவும், சவரனுக்கு 776 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 864 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 90 காசுகள் அதிகரித்து 69 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 ஆயிரத்து 900 ரூபாய் அதிகரித்து 69 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Discussion about this post