மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. காலை11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே முழுஅடைப்பு போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்னர். சென்னையில் மட்டும் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ளவுள்ளனர்.
Discussion about this post