தேனியில் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பின் கீழ், பல்வேறு தொழில் குழுக்களுக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூலதன நிதியுதவியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட உழவு மற்றும் தொழில்துறை உற்பத்தியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், சொந்த ஊர் திரும்பிய இளைஞர்கள் ஆகியோர் புதிதாக தொழில் தொடங்கும் வகையில் 300 கோடி ரூபாய் மதிப்பிலான மூலதன நிதி உதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கினார். 2 உற்பத்தியாளர் குழுக்கள், 3 தொழில் குழுக்கள் மற்றும் ஒரு உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூலதன நிதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post