தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி செய்வதாக, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து அரசாணை வெளியிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து ஜான் பாண்டியன் நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிட்டதட்ட 40 ஆண்டுகள் போராட்டத்துக்கு இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த அறிவிப்புக்காக ஸ்டாலின் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்காமல், குழப்பத்தை உருவாக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினார். மக்களுக்குள் பிரிவை உண்டாக்கி, கலவரத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி மேற்கொள்வதாகவும் குறை கூறினார்.
Discussion about this post