டெல்லியில் வருகிற 10 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான பூமி பூஜை விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
டெல்லியில் உள்ள நாடளுமன்ற கட்டடம் 100 ஆண்டுகளை நெருங்குவதையொட்டி, அதற்கு மாற்றாக புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, 861 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில், 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. வரும் 10 ஆம் தேதி, இதற்கான பூமி பூஜை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விழாவில் பங்கேற்கும் பிரதமர், நாடாளுமன்ற கட்டட பணிக்கு அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டு, 75- வது சுதந்திர தினத்துக்குள் புதிய நாடாளுமன்ற கட்டடம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post