‘பியார் பிரேம காதல்’ திரைப்பட கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேம காதல் திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், எலன் இயக்கி இருந்தார். ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் ஜோடியாக நடிப்பில் வெளியான இப்படம், விமர்சனம் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் – எலன் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைகின்றனர். இந்த படத்திற்கு HEY என பெயரிட்டுள்ளனர்.
Discussion about this post