செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 23 புள்ளி 5 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம், 22 புள்ளி 15 அடியாக உள்ளது. இந்த நிலையில், ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Discussion about this post