கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, கிறிஸ்துவ தேவாலயங்களில் திராட்சை ரசம் மற்றும் அப்பம் வழங்குவதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருசில கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. அதன்படி, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும், ஒரு சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பண்டிகையின் போது கிறிஸ்துவர்களுக்கு திராட்சை ரசம் மற்றும் அப்பம் வழங்குவதற்கு அனுமதி அளித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். திராட்சை ரசம் மற்றும் அப்பம் ஆகியவற்றை தனித்தனி குவளைகளில் வழங்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post