தமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் உறுதிபுரேவி புயல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.
வங்கக்கடலில் உருவான புரேவி புயல் டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை, கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ள நிலையில் இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் எடுத்துரைத்தார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதியளித்தார். புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல கேரள முதல்வரிடமும் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார்.
Discussion about this post