விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கையின் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அமைச்சர் குழுவில் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் விஜயகலா மகேஸ்வரன். தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அதில், தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், விடுதலை புலிகள் ஆட்சி செய்த போது பாதுகாப்பாக உணர்ந்ததாக குறிப்பிட்டார். அவரின் இந்த கருத்துக்கு இலங்கை அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து விஜயகலா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்க கொழும்பு குற்றச்செயல்கள் தடுப்பு பிரிவு காவல் அலுவலகத்தில் ஆஜரானதை தொடர்ந்து ,அவரை போலீசார் கைது செய்தனர்.
Discussion about this post