நிவர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு, நாளை தமிழகம் வரவுள்ளது.
நிவர் புயல் கடந்த வியாழக்கிழமை அதிகாலை புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. புயலால் அதிகம் பாதித்த மாவட்டமான கடலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தநிலையில், நாளை, 7 பேர் அடங்கிய மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொள்ள தமிழகம் வருகின்றனர். மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைலமையிலான இக்குழுவில், வேளாண்துறை, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை, நிதித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். முதலில் சென்னை வரும் மத்தியக் குழுவினர், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர். பின்னர் டிசம்பர் ஒன்றாம் தேதி தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து, புதுச்சேரிக்கு செல்லும் மத்தியக் குழுவினர் அங்கு புயல் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு நடத்தவுள்ளனர்.
Discussion about this post