தமிழக அரசின் 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் உதவியால், மருத்துவராகும் கனவு நிஜமாகியுள்ளதாக பெருமிதம் கொண்டுள்ளார் அரசுப்பள்ளி மாணவி பவித்ரா. மாணவி குறித்த ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு
மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராம பகுதியில் வசித்து வரும் மாணவி பவித்ரா. இவர், பழங்காநத்தம் பகுதியில் உள்ள நாவலர் சோமசுந்தர பாரதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பயின்று வந்தார். சிறுவயதிலிருந்தே மருத்துவராகும் லட்சியத்தோடு படித்த மாணவி, நீட் தேர்வில் 214 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனக்கு மருத்துவ இடம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தவித்துள்ளார். அப்போது தான், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு கரம் கொடுத்தது மாணவிக்கு. மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவி பவித்ரா, கலந்தாய்வில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.
நீட் தேர்வில் 214 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ இடம் கிடைக்குமா என்ற கலக்கத்தில் இருந்த நிலையில், தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒடுக்கீடு மூலம் மருத்துவ கனவு நிஜமாகி உள்ளதாகவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் மூலம் இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த தமிழக முதலமைச்சருக்கு, மாணவி பவித்ரா நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.
Discussion about this post