ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும், தடையை மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும் தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post