Times Now-Warroom Strategies நடத்திய கருத்துக்கணிப்பில் 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. 75 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையாக நடந்தால், தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.விற்கு அது பெரும் பின்னடைவாக அமையும். கடந்த 2013 ஆம் ஆண்டு தேர்தலில் 163 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருந்தது. டிசம்பர் 7 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இன்னும் தனது பிரசாரத்தை தொடங்கவில்லை. அவரது பிரசாரம் தேர்தல் முடிவை மாற்றும் என பா.ஜ.க.வினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post