சர்வதேச அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
வடக்கு கரோலினாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டிரம்ப், இந்த மூன்று நாடுகளில் இருந்து வெளியேறும் மாசடைந்த வாயுக்கள் காற்றில் அதிகமான அளவில் கலந்துள்ளதாக சாடினார்.
அமெரிக்கா சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், எரிசக்தியிலும் தன்னிறைவு அடைந்துள்ளது என்றும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
Discussion about this post