நடப்பாண்டில் இதுவரை 50 சுரங்கங்களை இணைய ஏலம் முறையில் மத்திய அரசின் கனிமவளத்துறை ஏலம் விடுத்தது. இதில் 23 சுண்ணாம்பு சுரங்கங்கள், 17 இரும்பு தாது சுரங்கங்கள், தங்க சுரங்கம் 4, மாங்கனீசு மற்றும் கிராபைட் சுரங்கங்கள் தலா 2 மற்றும் பாக்சைட் சுரங்கம் ஒன்றும், வைரச்சுரங்கம் ஒன்றும் அடங்கும். 2015-ம் ஆண்டு துவங்கி தற்போது வரை சுரங்கங்களை ஏலம் விட்டதன் வாயிலாக மத்திய அரசுக்கு 1.18 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிலையில் மத்திய கனிமவளத்துறை விடுத்துள்ள அறிக்கையில் அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதும் 102 சுரங்கங்கள் ஏலம் விடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, சட்டீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள சுரங்கங்கள் ஏலத்தில் வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜார்கண்ட்டில் 20 சுரங்கங்களும், ராஜஸ்தானில் 16 சுரங்கங்களும் மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 13 சுரங்கங்களும் ஏலத்தில் இடம்பெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post