இந்த ஆண்டுக்கான நோபல் அறிவிப்புகள் முடிவடைந்த நிலையில், எந்தெந்த துறையில் யார் யாருக்கு பரிசு அறிவிக்கபட்டது?
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஹார்வே ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ்-சி வைரசை இவர்கள் மூவரும் இணைந்து கண்டுபிடித்ததன் மூலம் பல புதிய மருந்துகள் தயாரிக்க முடிந்தது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
கருந்துளை பற்றிய ஆய்வு, நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருளை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு, இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. மரபணு கூறுகளை மாற்றியமைக்க உதவும் தொழில்நுட்ப முறையை இவர்கள் கண்டறிந்ததற்காக நோபல் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக திகழும் பெண் கவிஞர் லூயி க்லுக்-கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நோபல் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் உணவும் ஒன்று என்பதை மையக் கருத்தாக கொண்டு செயல்பட்டு வருவதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு நோபல் அமைதி விருது வழங்கப்படுகிறது.
2020ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, பால்.ஆர் மில்க்ரோம், ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏல கோட்பாடின் மேம்பாடு , ஏலத்திற்கான வடிவமைப்பு ஆகியவற்றை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post