90ஸ் கிட்ஸ்களின் தின்பண்டங்களுக்கு மீண்டும் மவுசு கூடி வரும் நிலையில், இத்தகைய பண்டங்களை மட்டுமே விற்கும் கடைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்து வருகின்றன. அந்த வரிசையில் தேனியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 90ஸ் கிட்ஸ் கடை 2கே கிட்ஸ்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது
21-ம் நூற்றாண்டின் துவக்கம் மனித வாழ்விலும், உணவுப் பழக்கத்திலும் பெருமளவு மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதனால் சாதாரணப் பெட்டிக்கடைகள் துவங்கி சூப்பர் மார்க்கெட் வரையில் அதுவரை விற்று வந்த தின்பண்டங்களின் இடத்தை சந்தைக்கு புதிதாக வந்த நொறுக்குத் தீனிகள் ஆக்கிரமித்தன .
20 வருடங்கள் இத்தகைய நொறுக்குத் தீனிகளிலேயே சென்ற இளைய சமுதாயத்தின் கவனம், மீண்டும் 90ஸ் கிட்ஸ் தின்பண்டங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு ஏற்றாற் போல 90ஸ் கிட்சுகளின் பேவரைட் தின்பண்டங்களை விற்கும் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
அந்த வகையில் தேனியில் 80ஸ்,90ஸ் மிட்டாய்க்கடை என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள கடை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமர்கட், குச்சி மிட்டாய், குருவிரொட்டி, எலந்தப்பழ மிட்டாய், எலந்தப் பொடியை சிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
குழந்தைப் பருவத்தைக் கடந்த 90ஸ் கிட்ஸ்களும் அலாதி ஆர்வத்துடன் தங்களுக்கு பிடித்தமான நொறுக்குத் தீனிகளை சுவைத்து மகிழ்கின்றனர். இந்த நொறுக்குத் தீனிகள், தங்களது குழந்தை பருவத்தை நினைபடுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Discussion about this post