தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா தலவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை திருவெற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், தாமிரபணி புஷ்கர ரத யாத்திரையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட அவர் யாத்திரியை தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய தமிழிசை, தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டம் செயல்படுவதாக குறிப்பிட்டார்.
ஆனால், இதை உடைத்தெறிய மிகப்பெரிய கூட்டம் தமிழகத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார். தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
புஷ்கர விழாவிற்காக, மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்குவதாகவும், அதேபோன்று தமிழக அரசும் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டார்.
Discussion about this post