மத்திய அரசின் வட்டிக்கு வட்டி ரத்து அறிவிப்பால் வீட்டுக்கடன் பெற்றவர்களைக் காட்டிலும், கிரெடிட் கார்டு, குறுகிய கால தவணை செலுத்துவோருக்கு கூடுதல் பயன் கிடைக்கும்.
உதாரணமாக, நீங்கள் 8 சதவித வட்டியில் கொரோனா ஊரடங்கிற்கு சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆண்டு தவணை காலத்தில் வீட்டுக்கடன் வாங்கியிருந்தால் உங்களுக்கு எஞ்சிய தவணைக்காலம் 180 மாதங்களாக இருந்திருக்கும். உங்களுடைய மொத்த கடன் மதிப்பு 50 லட்சம் ரூபாயாக இருந்தால் 6 மாத தவணை சலுகை காலத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 51 ரூபாய் வட்டி அதிகரித்திருக்கும். அதற்கு வட்டிக்கு வட்டி விதித்திருந்தால் 2 ஆயிரத்து 944 ரூபாய் மேலும் அதிகரித்திருக்கும்.
வட்டிக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தக் கடனுடன் வட்டித்தொகை இணைக்கப்பட்டால் தவணைக்காலம் 20 மாதங்கள் 25 நாட்கள் அதிகரித்திருக்கும். வட்டிக்கு வட்டி இல்லாததால் மொத்தக் கடனுடன் வட்டித்தொகை மட்டும் இணைக்கப்பட்டால் தவணைக் காலம் 20 மாதங்கள் 17 நாட்களே அதிகரிக்கும்.
இதுவே கிரெடிட் கார்டு பயனாளிகளை எடுத்துக்கொண்டால், 2 புள்ளி 99 சதவீத வட்டியில் 1 லட்சம் ரூபாய் உங்களுக்கு நிலுவைக்கடன் இருந்தால், உங்கள் வட்டி விகிதம் 1.99 சதவீதமாக இருந்தால் 610 ரூபாயும் வட்டி விகிதம்1.50 சதவீதமாக இருந்தால் 344 ரூபாயும் மிச்சமாகும். 7 ஆண்டு தவணை காலத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் எடுத்த ஒருவருக்கு மார்ச் மாதம் 16வது தவணை வருவதாக வைத்துக்கொண்டால், அவருடைய வட்டி மதிப்பு 8.50 சதவீதம் என்றால், மூவாயிரத்து 274 ரூபாய் மிச்சமாகும். 9.50 சதவீத வட்டி மதிப்பில் 25 லட்சம் ரூபாய் கடன் மதிப்பில், கார் வாங்கியவருக்கு இரண்டாயிரத்து 58 ரூபாய் மிச்சமாகும்
Discussion about this post