2020 ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஹெபடைட்டிஸ்-சி வைரஸை கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்பட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஹார்வே ஜே ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த மைக்கேல் ஹாட்டன் ஆகிய மூவருக்கும் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று மருத்துவர்களுக்கும் நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.
இந்த 3 விஞ்ஞானிகளும் ஏற்கனவே ஹெபடைட்டிஸ்-ஏ, பி வைரஸ்களையும் கண்டுபிடித்திருந்தனர். இதுவே, ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் ஆய்விற்கு உதவிகரமாக அமைந்தது. ஹெபடைட்டிஸ்-சி வைரஸ் கண்டுபிடிப்பின் மூலம், நாள்பட்ட ஹெபடைட்டிஸ் ஏற்படுவதற்கான காரணத்தை ரத்தப்பரிசோதனைகள் மூலம் கண்டறிய உதவுகிறது. சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் செல்களை அழித்தல் நோய் மற்றும் கல்லீரல் புற்று நோயை இதன் மூலம் குணப்படுத்த முடியும். மருத்துவத்துறையை தொடர்ந்து, இயற்பியல் துறைக்கான விருது 6ஆம் தேதியும், வேதியியலுக்கு 7ஆம் தேதியும், இலக்கியத்திற்கான நோபல் பரிசு 8ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது. அதே போன்று, அமைதிக்கான நோபல் பரிசு 9ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 10ம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது. அறிவிக்கப்படும் பரிசுகள் நோபல் தந்தையின் பிறந்த தினமான டிசம்பர் 10ம் தேதி வழங்கப்படுகின்றன.
Discussion about this post