தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் கிராமசபைக் கூட்டம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறவில்லை. இந்த நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், கொரோனா அச்சம் காரணமாக மதுரை, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை உள்பட்ட 13 மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். மற்ற மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுமா? என கேள்வி எழுந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post