தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப்படிப்பு மற்றும் சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டு ஹானர்ஸ் எல்எல்பி சட்ட படிப்பில் சேர செப்டம்பர் 30ம் முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் பட்ட மேற்படிப்பான எல்.எல்.எம்., பயில அக்டோபர் 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலமாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Discussion about this post