வங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த ஒப்புதல் அளித்துள்ளதால் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் போது வங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டம், தொற்று நோய்கள் திருத்த சட்டம், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு சட்டம் ஆகிய 3 சட்டமுன்வரைவுகள் தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த 3 சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
குறிப்பாக வங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால் கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துதல், செயல் திறனை மேம்படுத்துதல், முதலீட்டை அதிகப்படுத்துதல், நிர்வாகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகள் ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post