கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 1,046 இந்தியர்கள், 10 சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா பரவத் தொடங்கியதையடுத்து, தடுப்பு நடவடிக்கையாக பல நாடுகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக சர்வதேச விமானப்போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்தியாவிலும் உள்ளூர், சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. எனினும், வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்க வந்தேபாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அவர்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கைகள் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.
இம்மீட்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, ஓமன் அரசால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 40 பேர் இந்தியா கொண்டுவரப்பட்டனர். இந்தியா வந்த அவர்கள் குடியுரிமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அரசு முகாமில் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 1,006 பேர், சுங்கம், மருத்துவ சோதனைகள் உள்ளிட்டவைக்கு உட்படுத்தப்பட்டு, வீடுகளில் தனிமை படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்ற 682 இந்தியர்கள், 6 சிறப்பு விமானங்களில் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர்.
Discussion about this post