கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 45,000 குழந்தைகள், சிறப்பு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 542 குழந்தைகள் குணமடைந்துள்ளனர் என்றும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 372 குழந்தைகளும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரேனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட்ட 30 குழந்தைகளும், தொடர் சிகிச்சை மூலம் நலமடைந்துள்ளனர் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள், ரத்த புற்றுநோய் உள்பட பல்வேறு குறைபாடுகளுடன் சிகிச்சை பெற்று வந்த 944 குழந்தைகளும் என, தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 45,222 குழந்தைகளும் கொரோனா பிடியில் இருந்து மீண்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Discussion about this post